வித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரகுராம். சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்கு ரகுராமின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் பெரும்பங்காற்றி இருந்தன.
இதையடுத்து இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், ஏராளமான ஆல்பம் பாடல்களுக்கு ரகுராம் இசையமைத்து வந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே இவருக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்து வந்தது. அதாவது மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான் ரகுராமுக்கும் ஏற்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்.... எதுக்குங்க இந்த வேலை..விஷாலுடனான காதல் குறித்து உண்மையை உடைத்த அபிநயா