ஹீரோயின்கள் தோத்துடுவாங்க போலிருக்கே!..மனைவியுடன் வேற லெவல் போட்டோ சூட் நடத்திய ஹரிஷ்கல்யாண்

First Published | Oct 29, 2022, 8:24 PM IST

திருமண போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள இந்த தம்பதியினரின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாகிவிட்ட நடிகராக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இவர், இதை அடுத்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா உள்ளிட்ட படங்களில் நடித்து பிபலமானார்.

பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு அறிமுகமான இவர் மீண்டும் வில் அம்பு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு திரும்பி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் இவருக்கு மாபெரும் அறிமுகம் கிடைத்ததென்றே சொல்லலாம்.

மேலும் செய்திகளுக்கு...Amy Jackson : வேற லெவல் பிகினியா இருக்கே?..ஸ்வோட்டருடன் கடற்கரையில் உறைந்து நிற்கும் எமி ஜாக்சன்

Tap to resize

வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 2 வது நாளில் உள்நுழைந்த இவர் 98 நாட்கள் தாக்கு பிடித்து இரண்டாவது ரன்னர் அப்பா வந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது. அதன்படி அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா வில்சனுடன் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் நாயகனாக நடித்தார். 

இந்த படம் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா தயாரித்த இந்த படம் மூலம் ஹரீஷ் கல்யாண் சாக்லேட் பாயாக மாறிவிட்டார். இவருக்கு ரசிகைகள் பட்டாளமும் அதிகரித்துவிட்டது. பின்னர் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற , ஓ மண பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து தனது பேன்ஸ் பேஸை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு... எதுக்குங்க இந்த வேலை..விஷாலுடனான காதல் குறித்து உண்மையை உடைத்த அபிநயா

harish kalyan

ஹரிஷ் கல்யாண் தற்போது 100 கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் தான் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து விரைவில் திருமணம் நடைபெறும் என கூறி இருந்தார் ஹரிஷ் கல்யாண்.

harish kalyan

இளம் பெண்கள் மத்தியில் கனவு நாயகனாக ஜொலித்து வந்த ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் என்பதை கேள்விப்பட்ட ரசிகைகள் உடைந்து தான் போனார்கள். நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார். 

harish kalyan

இதையடுத்து சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுல்யா ரவி, இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பிந்து மாதவி என பலரும் வருகை தந்து வாழ்த்து இருந்தனர். இவர்களது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்களை பெற்று வந்தது.

harish kalyan

இதை தொடர்ந்து ரிசப்ஷன் மற்றும் தற்போது திருமண போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள இந்த தம்பதியினரின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Latest Videos

click me!