தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார். செல்லமே, சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் இங்கு பிரபலமானவர். முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சங்க பொதுச் தேர்தலில் போட்டியிடுகையில் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சூளுரைத்தார் விஷால்.
அதன்படி இவர் கூட்டணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றியும் கண்டனர். பின்னர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து மீண்டும் வெற்றி பெற்ற இவர்களது கூட்டணி தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பாதி வேலையை முடித்து விட்டது. இதற்கிடையே விஷாலுக்கும் அனிஷா என்பவருக்கும் நிச்சயதார்த்த முடிந்தது. ஆனால் இந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது.
இதையடுத்து சினிமாக்களில் பிஸியாகிவிட்டார் விஷால். அதன்படி இறுதியாக இவர் நடிப்பில் லத்தி என்கிற படம் வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த வருகிறார். திரிஷா இல்லனா, நயன்தாரா என்னும் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான அபிநயாவிற்கு காது கேட்காது மற்றும் வாய் பேசவும் முடியாது. இவரை திருமணம் செய்வது குறித்து விஷாலின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். இந்த தகவல் குறித்து நடிகை அபிநயா விளக்கம் கொடுத்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்துள்ளேன். சினிமாவில் கணவன் மனைவியாக நடித்ததால் உண்மையில் அப்படி ஆகிவிட முடியுமா என்னும் கேள்வியையும் அபிநயா எழுப்பி உள்ளார். இதனால் விஷாலுக்கும் அபிநயாவுக்கும் இடையான காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.