கூலிக்கே ஷாக் ஆனா எப்படி? இதற்கு முன் ரஜினி நடித்து ஏ சான்றிதழ் பெற்ற தமிழ் படங்கள் இத்தனையா?

Published : Aug 02, 2025, 11:15 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் அவர் நடித்து ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பார்க்கலாம்.

PREV
14
Rajinikanth A certificate Movies

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24
கூலி படத்திற்கு ஏ சான்றிதழ்

இந்த நிலையில், கூலி படத்தின் சென்சார் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதற்கு முக்கிய காரணம் இதில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய பேட்டிகளில் தொடர்ந்து கூறி வருவது வயலன்ஸில் காம்பிரமைஸ் செய்துகொள்ள மாட்டேன் என்பது தான். அதேபோல் கூலியிலும் வயலன்ஸ் தூக்கலாக இருக்கும் என்பதற்கு அதன் சென்சார் சன்றிதழே சான்று. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதால் இப்படத்தை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க முடியாது.

34
36 ஆண்டுகளுக்கு பின் ஏ சான்றிதழ்

நடிகர் ரஜினி நடித்து கடைசியாக ஏ சான்றிதழ் பெற்ற படம் என்றால் அது கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த சிவா தான். அப்படத்திற்கு பின் அவர் நடித்த எந்த படமும் ஏ சான்றிதழ் பெற்றதில்லை. தற்போது 36 ஆண்டுகளுக்கு பின்னர் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் ஏ சான்றிதழ் பெறும் இரண்டாவது படம் கூலி. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்திற்கும் சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

44
ரஜினியின் ஏ சான்றிதழ் படங்கள்

கூலி படத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த 20 படங்கள் இதுவரை ஏ சான்றிதழ் பெற்றிருக்கின்றன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

* புவனா ஒரு கேள்விக்குறி (1977)

* காயத்ரி (1977)

* இளமை ஊஞ்சல் ஆடுகிறது (1978)

* அவள் அப்படித்தான் (1978)

* என் கேள்விக்கு என்ன பதில் (1978)

* காளி (1980)

* நெற்றிக்கண் (1981)

* ரங்கா (1982)

* புதுக்கவிதை (1982)

* மூன்று முகம் (1982)

* பாயும் புலி (1983)

* சிவப்பு சூரியன் (1983)

* கை கொடுக்கும் கை (1984)

* நான் மகான் அல்ல (1984)

* நான் சிகப்பு மனிதன் (1985)

* உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)

* விடுதலை (1986)

* ஊர்க்காவலன் (1987)

* கொடி பறக்குது (1988)

* சிவா (1989)

Read more Photos on
click me!

Recommended Stories