Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைக்க சிவனாண்டி பிளான் பண்ணிய நிலையில் கார்த்திக் தனது மாமியாரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. என்னதான் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக கார்த்திகை தீபம் இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் இந்த சீரியலும் ஒன்று. அப்படி இன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்த்திகை தீபம் 2 சீரியலில் சாமுண்டீஸ்வரி போலீஸ் லாக்கப்பில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23
கார்த்திகை தீபம் 2 கார்த்திக் ராஜா கைது
தனக்கு மாலை போட வந்தவர் தன்னிடம் அத்துமீறிய நிலையில் பொதுவெளி என்று கூட பார்க்காமல் சாமுண்டீஸ்வரி அவரை கன்னத்தில் அறையவே அந்த நபர் மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா உண்மையில் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
33
சிவனாண்டி, மருத்துவ சான்றிதழ்
இதைத் தொடர்ந்து அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்றும் மருத்துவ சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் சிவனாண்டி ஊர் முழுவதும் தண்டோரா போட்டார். மேலும் காவல் நிலையத்திலும் சாமுண்டீஸ்வரிக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சாமூண்டீஸ்வரி வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். என்னதான் கார்த்திக் ஸ்டேஷனுக்கு வந்து அதிகாரிகளிடம் பேசினாலும் அவரை விடுவிப்பதாக இல்லை.
அதன் பின்னர் கார்த்திக் மற்றூம் மயில்வாகனம் இருவரும் இறந்துவிட்டதாக சொல்லப்படும் அந்த நபரை தேடி ஒவ்வொரு வீடாக தேடுகின்றனர், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சாமுண்டீஸ்வரி காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி நாளை திங்கள் கிழமை எபொடூகளில் பார்க்கலாம்