Horror Thriller web series : ஓடிடி தளங்களுக்கு காசு கட்ட முடியலையா கவலைய விடுங்க, யூடியூப்பில் உள்ள இந்த தமிழ் வெப் சீரிஸை ஃப்ரீயாவே பார்க்கலாம். அதைப்பற்றி இங்கே காணலாம்.
திகில், சஸ்பென்ஸ், கிரைம், மர்மம் கலந்த கதைகளுக்கு ஓடிடி ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, கடைசி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களையும் வெப் சீரிஸ்களையும் பார்வையாளர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். இதனால் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தொடர்ந்து புதுப்புது த்ரில்லர் கன்டென்ட்கள் வெளியாகி வருகின்றன. ஓடிடியில் காசு கட்டி பார்ப்பதற்கு பதிலாக யூடியூப்பில் ஃப்ரீயாக பார்க்கவே சில வெப் சீரிஸ் இருக்கின்றன. அதில் ஒரு வெப் சீரிஸ் பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.
அந்த வரிசையில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது ‘கருவனம்’ என்ற தமிழ் ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ். ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் பல படைப்புகளுக்கு மத்தியில், இந்தத் தொடரை நேரடியாக யூடியூபில் இலவசமாகவே பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாகியுள்ள இந்தத் தொடரில் உதயா சுந்தரி, ஜெய ஸ்ரீ விஜயன், விக்னேஷ் வரதராஜன், வீரராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குமரன் சுந்தரன் இயக்கியிருக்கும் இந்தத் தொடரில், மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
34
கதைக்களம் என்ன?
கதையின் மையத்தில் மீரா மற்றும் ஷாலினி என்ற இரண்டு அனாதை சிறுமிகள் இருக்கின்றனர். இருவரும் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வரும் நிலையில், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களை தத்தெடுக்கிறார்.
அதன்பிறகு அந்தப் பெண்ணின் வீட்டில் இருவரும் வாழத் தொடங்குகின்றனர். ஆனால் அங்கு சென்ற பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் அனைத்தும் இயல்பானதாக இல்லை. வீட்டுக்குள் நடக்கும் மர்மமான நிகழ்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என கதை மெல்ல மெல்ல வேறு திசைக்குச் செல்கிறது.
இதற்கிடையே அவர்களின் தாயின் மரணம் தொடர்பாகவும் பல கேள்விகள் எழுகின்றன. அவர்களுடைய தாய் எப்படி இறந்தார்? அந்த மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? தத்தெடுத்த வீட்டில் இரண்டு சிறுமிகளுக்கும் என்ன நடந்தது? என்பதுதான் தொடரின் முக்கிய மர்மமாக அமைந்துள்ளது.
திகில் காட்சிகளுடன் சஸ்பென்ஸையும் சேர்த்து நகரும் இந்தத் தொடர், ஆரம்பத்திலேயே பார்வையாளர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய தகவல்கள் வெளிப்படுவதால், அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.
இந்தத் தொடரில் மொத்தம் 12 எபிசோடுகள். யூடியூபில் இலவசமாகக் கிடைப்பதால், தமிழ் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் கன்டென்ட்களை விரும்புபவர்களுக்கு ‘கருவனம்’ ஒரு புதிய தேர்வாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.