அரிவாள், துப்பாக்கிய இனி ஓரம் கட்டுங்க! சிவகார்த்திகேயன் ஸ்டைலை கையில் எடுத்த சூர்யா! இது வொர்க் அவுட் ஆகுமா?

Published : Jan 30, 2026, 11:26 AM IST

ஆக்ரோஷமான ஆக்‌ஷன் படங்களுக்குப் பதிலாக 'பீல் குட்' திரைப்படங்கள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த புதிய ட்ரெண்டைப் பின்பற்றி, 'கங்குவா' படத்திற்குப் பிறகு சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு முழு நீள குடும்ப எமோஷனல் டிராமா படத்தில் நடித்துள்ளார். 

PREV
14
மாஸ் ஹீரோக்களுக்கு வந்த 'பீல் குட்' ஜுரம்!

தமிழ் சினிமா என்றாலே கடந்த சில காலமா 'யார் அதிகமா ரத்தம் சிந்த வைக்கிறது?' என்கிற போட்டிதான் ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் ஸ்டைல் வன்முறை, இன்னொரு பக்கம் நெல்சன் ஸ்டைல் கன்-ஃபைட்னு தியேட்டரே போர்க்களம் மாதிரி தெரிஞ்சது. ஆனா, இப்போ சீன் அப்படியே டோட்டலா மாறுது!

கையில் அரிவாள் பிடிச்சு ஆக்ரோஷமா கத்துற ஹீரோக்களை விட, பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி எதார்த்தமா நடிக்கும் ஹீரோக்களுக்கு இப்போ மவுசு கூடிப்போச்சு. மணிகண்டனின் 'குட் நைட்'ல ஆரம்பிச்சு கவினின் 'டாடா' வரை எல்லாமே செம ஹிட். இதை கவனிச்ச நம்ம டாப் ஹீரோக்களும் இப்போ "நமக்கும் ஒரு சாஃப்ட் இமேஜ் வேணும்"னு ரூட்டை மாத்த ஆரம்பிச்சுட்டாங்க.

24
சூர்யாவின் செம 'யூ-டர்ன்'! சூர்யானாலே நமக்கு 'சிங்கம்'

துரைசிங்கம் தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனா, சூர்யா இப்போ ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கார். 'கங்குவா' போன்ற பிரம்மாண்டங்களுக்கு அப்புறம், தனது 46-வது படத்துக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி கூட கைகோர்த்திருக்கார்.

இந்த படம் எப்படி தெரியுமா? ரத்தம் தெறிக்கிற சண்டையே கிடையாதாம்! முழுக்க முழுக்க ஒரு க்யூட்டான 'பீல் குட்' ஃபேமிலி டிராமா. அதாவது, நம்ம சிவகார்த்திகேயன் படத்துல இருக்குற அந்த ஜாலியான, எமோஷனலான ஸ்டைலை இப்போ சூர்யா கையில் எடுத்திருக்கார். படப்பிடிப்பு முடிஞ்சாச்சு, படமும் ஒரு 'லவ் அண்ட் எமோஷனல்' பேக்கேஜா வந்திருக்காம்.

34
இது வொர்க் அவுட் ஆகுமா?

ரசிகர்கள் மத்தியில இப்போ ஒரு கேள்வி எழுந்திருக்கு. "ரோலக்ஸ் மாதிரி மிரட்டலான கேரக்டரை பார்த்துட்டு, திடீர்னு சூர்யாவை சாஃப்ட் ரோல்ல ஏத்துக்குவாங்களா?" என்பதுதான் அது. ஆனா, சூர்யாவுக்கு 'வாரணம் ஆயிரம்', 'சில்லுனு ஒரு காதல்'னு லவ் சப்ஜெக்ட்ல ஆல்ரெடி ஒரு பெரிய ஹிஸ்டரியே இருக்கு. அதனால இந்த 'பீல் குட்' அவதாரம் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைய வாய்ப்பு அதிகம்!

44
வரிசை கட்டி நிற்கும் படங்கள்!

சூர்யா மட்டும் இல்ல, இந்த ட்ரெண்ட்ல இன்னும் பல விக்கெட்டுகள் இருக்கு:

நயன்தாரா & கவின்

'ஹை' படத்துல ஒரு புதுவிதமான எமோஷனல் டிராவல் காத்துட்டு இருக்கு.

பிரதீப் ரங்கநாதன்

'LIK' படம் மூலமா பிப்ரவரியே 'பீல் குட்' மழையை ஆரம்பிச்சு வைக்கப் போறார்.

அபிஷன் ஜீவிந்த்

'வித் லவ்' படம் மூலமா க்யூட் ஹீரோவா என்ட்ரி கொடுக்க ரெடி!

மொத்தத்துல, தியேட்டர்ல இனி துப்பாக்கி சத்தம் குறையும், கைதட்டல் சத்தம் கூடும் போல! சூர்யாவின் இந்த 'சிவகார்த்திகேயன் ரூட்' சக்சஸ் ஆகுமாங்கிறத பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories