ஒரே ரீல்ஸ் மூலம் உலகம் முழுவதும் திரும்பிப்பார்க்க வைத்தவர் கூமாபட்டி தங்கராஜ். கூமாபட்டி கிராமத்தை தனது தனித்துவமான பேச்சின் மூலம் ‘ஏங்க...’ என வீடியோ போட்டு கூமாபட்டி கிராமத்தை அடையாளப்படுத்தியதோடு அவரே ஒரு செலிப்ரட்டியாகவும் மாறி கலக்கி வருகிறார். "சிங்கிள் பசங்க" போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, ரசிகர்களை ஈர்த்து வருகிறார். பொழுதுபோக்காளார் என பலரும் நினைத்திருக்க, தனக்குள் இருக்கும் நாட்டுப்பற்றை ஆழமாகப் பேசி ஆச்சர்யப்படுத்தி வருகிறார் கூமாபட்டி தங்கராஜ்.
அவரது பேட்டியில், ‘‘ஜாதியைப் பற்றி பேசுபவர், மதத்தைப் பற்றி பேசுவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஒருத்தன் ஜாதியை அடையாளப்படுத்துகிறான், என் ஜாதிதான் பெரிது என கூறுகிறான் என்றால் அவனை புறக்கணிக்க வேண்டும். தேசத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். பள்ளி பருவங்களில் யாரெல்லாம் தேசத்திற்கு உழைத்தார்கள் என்று என் நெஞ்சில் மார்பை நிமிர்த்தி பேசினேனோ, இப்போது அவர்களை தலை வணங்கி, டுத்து கும்பிட மாட்டேன். இவர்தான் தேசத்தில் ஆணிவேர் என்று சொல்வீர்களே.. அவர்களை துளியளவு வணங்க மாட்டேன். இனிமேல் இவர்களை வணங்க கூடாது, இவர்களைப் பற்றி பேசவும் கூடாது. எதிர்காலத்தில் இவர்களது கல்லறைகள்கூட இந்தியாவில் இருக்க கூடாது என்று ஒரு முடிவை எடுத்து விட்டேன்.