பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர் தான் நித்யானந்தா. இவர் பேமஸ் ஆனது ரஞ்சிதா வீடியோ மூலம் தான். ரஞ்சிதா உடன் நித்யானந்தா அந்தரங்க உறவில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து தான் அவரின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. இதையடுத்து உஷாரான நித்யானந்தா, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நாட்டைவிட்டே ஓடிவிட்டார்.
24
kailasa
தற்போது அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அவ்வப்போது யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். இடையே தான் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு ஐநா அங்கீகராம் அளித்துவிட்டதாகவும் புருடா விட்டு பரபரப்பை கிளப்பினார். கைலாசா நாட்டிற்கு வர ஆன்லைனிலேயே விசா பெறலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி கைலாசா நாட்டுக்கென தனி கொடி, நாணயம் ஆகியவற்றை அறிவித்த அவர், வர்த்தக ரீதியாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டார். நித்யானந்தா உடனான வீடியோ லீக்கானதை அடுத்து அவருடைய சிஷியையாகவே மாறிவிட்ட ரஞ்சிதா, தொடர்ந்து அவருடன் பயணித்து வருகிறார்.
44
Ranjitha
தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவும் செய்தி என்னவென்றால், ரஞ்சிதா பிரதமராகிவிட்டார் என்பது தான். தான் கைலாசா நாட்டின் பிரதமர் என ரஞ்சிதாவின் லிங்க்டு இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது தான் இந்த சலசலப்புக்கு காரணம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கைலாசா அலப்பறை தாங்க முடியலயே என கிண்டலடித்து வருகின்றனர். சிலரோ உங்கள் நாட்டு ஜனாதிபதி யார் என்பதையும் சொல்லிவிடுங்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.