BiggBoss Tamil 5: பிக்பாஸ் வீட்டில் ஊற்றெடுக்கும் புது காதல்..! சந்துல சிந்து பாடும் இந்த ஜோடியை கவனிசீங்களா?

First Published | Nov 8, 2021, 7:55 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5) ஒரே சண்டை கடையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய காதல் ஜோடி ஒன்று உருவாவது போல் தெரிகிறது. சத்தமில்லாமல் சந்தில் சிந்து பாடி கொண்டிருக்கும் இந்த ஜோடிகளை கவனிசீன்களா...

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் தங்களை ரொம்ப நல்லவர்கள் என்று வெளிகாட்டிக்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல இவர்களுடைய சாயம் வெளுத்து தற்போது வெள்ளையாகி விட்டது என்று தான்கூறவேண்டும்.

கடந்த வாரம், தன்னை காப்பாற்றி கொள்ள வாய்ப்பிருந்தும் அதனை தவற விட்டதால் ஸ்ருதி மிக குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Tap to resize

மேலும் எது எடுத்தாலும் சண்டை போட்டு கொள்ளும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள், கடந்த வாரம் கை ஓங்கும் அளவிற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் துல்லியமாக கணித்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். அந்த வகையில் இது வரை விளையாடி வருபவர்களில் ராஜு தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

சண்டை சச்சரவுகள் ஒரு புறம் இருந்தாலும், இதுவரை பெரிதாக யாருடனும் ஒட்டாமல் இருந்து வரும் அக்ஷரா... வருணுடன் நெருங்கி பழகி வருவதை பார்க்க முடிகிறது.

தங்களுக்குள் எதுவும் இல்லை என இருவரும் காட்டி கொள்வது போல் தெரிந்தாலும்... அக்ஷராவின் உடை பிடிக்க வில்லை என்று வருண் சொன்னதும் உடனடையாக அதை அவர் மாற்றி கொள்வது போன்ற விஷயங்கள் ரொம்ப சைலண்டாகவே நடக்கிறது.

இன்றைய ப்ரோமோ காட்சியில் கூட, சிபி அக்ஷராவின் பொம்மையை உடைத்ததை வருணிடம் தான் கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.  

இப்போது இவர்கள் நட்புடன் பழகி வந்தாலும், பிக்பாஸ் வீட்டை கொஞ்சம் கிளுகிளுப்பாக்கும் விதத்தில் புது காதல் ஊற்றெடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Latest Videos

click me!