தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. 2007ம் ஆண்டு இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் இவருக்கு தேசிய விருது பெற்று தந்தது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகலும், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் பிரியாமணி நடிப்பில் சமீபத்தில் கூட‘பேமிலி மேன்’ வெப் சிரீஸ் வெளியானது. இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார்.
அதே போல் தமிழ் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியா மணி நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்கில் வெளியாமல் ஓடிடி தளத்தில் வெளியானது.
கெரியரில் வெற்றிகரமாக வலம் வரும் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சமீபத்தில் திடீர் சிக்கல் வெடித்துள்ளது. ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரைத் தான் 2017ம் ஆண்டு பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013ம் ஆண்டே ஆயிஷாவையே முஸ்தபா விவாகரத்து செய்துவிட்டதாக கூறிவந்த நிலையில், தன்னை என் கணவர் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்றும், பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட போது நீதிமன்றத்தில் பேச்சிலர் என கூறியதாகவும் ஆயிஷா பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைத்திருந்தார்.
ஆனால் முஸ்தபா ராஜ், ஆயிஷா தன்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும், தன்னிடமிருந்து பணம் பறிக்கவே இப்படி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
Priyamani
2010ம் ஆண்டே ஆயிஷாவை பிரிந்துவிட்டதாவும், 2013ம் ஆண்டு விவகாரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். 2 குழந்தைகள் முகத்திற்காக இதுவரை பிரச்சனைகளை முடிக்க பார்த்ததாகவும், இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
பிரியாமணியை முஸ்தபா ராஜ் திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் மனைவி ஆயிஷா இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து பிரியா மணி மற்றும் அவரது கணவர் முஸ்தப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் பிரியா மணி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சில ஊடகங்கள் அதிகார பூர்வம் இல்லாத தகவல்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், இப்படி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியா மணி தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் இவர் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.