அஜித்தின் 'வலிமை' (Valimai) படத்தில் இளம் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா கும்மகொண்டாவிற்கும் (Kartikeya Gummakonda) அவரது காதலிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து, பட விழாவில் கார்த்திகேயா தன்னுடைய காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக லவ் புரோபோஸ் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி, இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'Rx 100 ' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
210
தமிழில் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கதையின் நாயகியாக நடித்த '90 ML ' படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
310
இந்நிலையில் தற்போது, அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பாப்புக்கு மத்தியில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் அதிரடி ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார்.
410
இவர் வலிமை பட ஷூட்டிங்கில் அஜித்துடனும், படக்குழுவினர் உடனும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
510
இந்நிலையில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே லோகிதா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது 11 வருடம் கழித்து கழித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளனர்.
610
அந்த வகையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஆகஸ்ட் மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சிறப்பாக நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் ரகசியமாகவே இருந்த நிலையில் கார்த்திகேயா திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில வெளியாகி வைரலானது. எனவே இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கார்த்திகேயா கும்மகொண்டா தன்னுடைய காதலி லோகிதாவை முதல்முறையாக சந்தித்தபோது எடுத்து புகைப்படத்தையும், தற்போதைய திருமண நிச்சயதார்த்தம் புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்தார்.
710
இதுவரை திருமண தேதி குறித்து எந்த தகவலையும் இவர் வெளியிடாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் நடந்த பட விழாவில், காதலி லோகிதாவிற்கு முட்டி போட்டு காதலை வெளிப்படுத்தி, தன்னுடைய திருமண வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
810
கார்த்திகேயா தற்போது 'ராஜ விக்ரமார்கா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. ஐதரபாத்தில் நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் நாயகன் கார்த்திகேயா தன்னுடைய காதலி லோகிதாவையும் அழைத்து வந்திருந்தார்.
910
அப்போது திடீர் என தன்னுடைய காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பத்திரிகையாளர்கள் மத்தியில்... முட்டி போட்டு தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்தினார். லோகிதாவும் என்ன சொல்வது என தெரியாமல் கார்த்திகேயாவை கட்டி பிடித்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1010
கார்த்திகேயா ஹீரோவாக நடித்துள்ள 'ராஜ விக்ரமார்கா' படத்தில் இவருக்கு ஜோடியாக, நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். Sri Saripalli என்பவர் எழுதி இயக்கியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.