15 வயதிலேயே திரைப்படத்தில் கதாநாயகியாக மாறிய நடிகை லட்சுமி மேனன், இடையில் ஸ்லிம் பிட்டாக மாறி பட வாய்ப்புகளை தேடிய நிலையில், தற்போது மீண்டும் கொழுக்கு மொழுக்கு அழகியாக மாறியுள்ளார்.
ஆரம்பமே இவருக்கு அமோகம் தான் என கூறும் அளவிற்கு, இவர் முதலில் நடித்து வெளியான சுந்தர பாண்டியன், மற்றும் கும்கி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
பின்னர் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த லட்சுமி மேனன் பட தேர்வுகள் சற்று சொதப்பியதால் தன்னுடைய சினிமா கெரியரில் சரிவை சந்தித்தார்.
குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்த 'ரெக்க' படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் சொந்த ஊருக்கே மூட்டையை காட்டினார்.
பட வாய்ப்புகள் இல்லை என்றதும், படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த துவங்கிய... லட்சுமி மேனன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த படம் ஓரளவுக்கு இவருக்கு கை கொடுக்கவே... திரையுலகில் அடுத்த ரவுண்டுக்கு தயாராக லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறினார்.
ஆனால் தற்போது இளைத்த உடலை ஏற்றி கும்முனு மாறியுள்ளார். திரைப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி விட்டாரா? என்று கூட ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும், தற்போது இவரது கை வசம், கெளதம் கார்த்தியுடன் சிப்பாய், ஏ ஜி பி ஆகிய இரண்டு தமிழ் படம், மற்றும் ஒரு மலையாள படம் இவர் கைவசம் உள்ளது.
தற்போது இவர் ரசிகர்கள் கவரும் விதமாக, கிழிந்த ஜீன்ஸ் மற்றும் விதவிதமான உடைகள் அணிந்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் வைரலாக பார்ப்பட்டு வருகிறது.