போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூரின் பிறந்தநாள் விழாவின் போது எடுக்க பட்ட ஜான்வி கபூரின் புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜான்வி கபூர் தன்னுடைய தங்கையின் 21 ஆவது பிறந்த நாளில் ஓவர் டைட்டான பிங்க் கலர் உடையில் பார்பி பொம்மை போல் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் வெளியிட வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.
குஷி கபூரின் பிறந்த நாள் விழாவில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் நட்சத்திரக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சில வற்றையும் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கை குஷி கபூரின் பிறந்த நாளையே தன்னுடைய கவர்ச்சியால் ஹை லைட் செய்து விட்டார் ஜான்வி கபூர் என நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை இவரது புகைப்படத்திற்கு பதிவிட்டு வருகிறார்கள்.
ஜான்வி கபூர் பாலிவுட் பட நடிகையாக இருந்தாலும், இதுவரை பெரிதாக எந்த படத்திலும் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டியது இல்லை. ஆனால் தங்கையின் பிறந்தநாளில் கொஞ்சம் ஓவராக கிளாமரை அள்ளி வீசியுள்ளார்.
பிறந்தநாள் பேபி குஷி, ஒரு லாங் கவுனில்... சிக்கென உடல்கட்டை வெளிப்படுத்தும் பேபி பிங்க் உடையை அணிந்திருந்தார்.
ஆட்டம் - பாட்டம் என கலை கட்டிய குஷி கபூரின் பிறந்தநாள் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
அதே நேரத்தில் ஜான்வி தான்... கவர்ச்சியிலும், ஓவர் சந்தோஷத்திலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியை ஹாட் ஆகியது மட்டும் அல்ல படு மாஸாக கொண்டாடியுள்ளார்.