பாண்டியன் ஸ்டோர் சீரியலில் களமிறங்கும் புதிய நடிகை..! யார் தெரியுமா? இனி சண்டை கன்ஃபாம் ..!

First Published | Jan 21, 2021, 10:37 AM IST

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய நடிகை ஒருவரின் வருகையில், இதுவரை அமைதியாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் புதிய பிரச்சனைகள் பொறி பறக்கும் என கூறப்படுகிறது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
Tap to resize

மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.
ஆனால் இந்த சீரியலின் மீதான விறுவிறுப்பை கூடுதலாக்கும் விதமாக, புதிய வில்லியாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா ராஜ்குமாரின் அத்தை கதாபாத்திரத்தில் இந்த புதிய நடிகை இணைந்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள புரோமோவில், இல்லாத பிரச்னையை உருவாக்கி, நன்றாக சென்றுகொண்டிருக்கும் குடும்பத்தில் கும்மியடிக்கும் விதமாக மீனாவிடம் இவர் பற்ற வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே யார் என்ன சொன்னாலும், அதை காதுகொடுத்து கூட கேட்காமல் கத்தும் மீனா, அத்தையின் பேச்சை கேட்டு பெரிய பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சண்டை போட வாய்ப்பிருக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Videos

click me!