மீண்டும் சந்தித்துக் கொண்ட கவின் - லாஸ்லியா... தாறுமாறு வைரலாகும் சக்சஸ் பார்ட்டி போட்டோஸ்...!

First Published | Jan 20, 2021, 7:01 PM IST

கவின், லாஸ்லியா இருவரும் தனித்தனியே  ஆஜித் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஒன்றாக இணைத்து #KaviLiya என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவிற்கும், நடிகர் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது ஊரறிந்த செய்தி.
இடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் இருவரது செயலால் மிகவும் கோபப்பட்டார். இதனால் அப்பாவை சமாதானப்படுத்துவதற்காக கட்டி பிடித்து கதறி அழுத லாஸ்லியாவின் வீடியோவை பார்த்து கண்ணீர் வடிக்காதவர்களே கிடையாது.
Tap to resize

அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றதும் காதலை தொடரலாம் என இருவரும் நினைத்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. காதல் குறித்து பலமுறை ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வாய் திறக்கவில்லை.
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஒருவரை மற்றொருவர் வெறுப்பேற்றுவது போல் பதிவுகளை வேறு போட்டதால் ரசிகர்கள் அப்போ Kaviliya காலியா?என கடுப்பாகினர்.
சமீபத்தில் கூட கவின் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஸ்டைலிஷ் ஒருவரை கரம் பிடிக்க உள்ளதாகவும், லாஸ்லியாவிற்கு கனடா மாப்பிள்ளையுடன் திருமணம் என்றும் தகவல்கள் வெளியான. இவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே பெருச்சோகமாக லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் காலமானார். ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு அவருடைய உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சோகத்தில் இருந்து தற்போது தான் லாஸ்லியா மீண்டு வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கவின், ரம்யா பாண்டியனை வெளியே அழைத்து வந்தார்.
அதன் பின்னர் நடந்த பிக்பாஸ் சீசன் 4 சக்சஸ் பார்ட்டியில் கவினும், லாஸ்லியாவும் ஒன்றாக பங்கேற்றது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
கவின், லாஸ்லியா இருவரும் தனித்தனியே ஆஜித் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஒன்றாக இணைத்து #KaviLiya என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
சக்சஸ் பார்ட்டியில் இருவரும் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் நிலையில், ரசிகர்கள் உருவாக்கிய இந்த போட்டோ வைரலாகி வருகிறது. அத்துடன் இது உண்மையாகவே நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!