இன்ஸ்டாவில் மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட ஒரே ஒரு போஸ்ட்... ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள் - அப்படி என்ன சொன்னார்?

Published : Aug 06, 2025, 09:05 AM IST

ஜாய் கிரிசில்டா உடனாக திருமணம் குறித்து மனம் திறக்காமல் இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது சூசகமாக போட்டுள்ள இன்ஸ்டா பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

PREV
15
Madhampatty Rangaraj Insta Post Viral

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சமையல் கலைஞர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ், பிரதமர் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரது வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து புகழ் பெற்றார். இவர் சினிமாவிலும் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஸ்ருதியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

25
மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்

இந்த நிலையில், தன்னுடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த ஜாய் கிரிசில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த வதந்திகள் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ், நெற்றியில் குங்குமம் வைப்பது மற்றும் மாலையும் கழுத்துமாக போஸ் கொடுப்பது போலவும் போட்டோக்களை பகிர்ந்திருந்தார். தாங்கள் இருவரும் கணவன், மனைவி ஆகிவிட்டதாக குறிப்பிட்டிருந்த அவர், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அனைவரும் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாகிவிட்டதாக குறிப்பிட்டு வந்தனர். ஜாய் கிரிசில்டா ஏற்கனவே திருமணமான ஒருவருடன் உறவில் இருப்பதால் அவரை ரசிகர்கள் இணையம் முழுவதும் திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒருபக்கம் தனது உறவு குறித்து ஜாய், ஓப்பனாக கூற, மாதம்பட்டி ரங்கராஜ் இதைப்பற்றி எதுவுமே வாய்திறக்காமல் இருந்து வருகிறார். இதையடுத்து நேற்று ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

35
ஜாய் கிரிசில்டா போட்ட அதிர்ச்சி பதிவு

அந்த பதிவில், தனது ஃபோன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த நம்பரில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் வந்தால் அதற்கு எதுவும் பதில் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். யாரிடமெல்லாம் எனது நம்பர் இருக்கிறதோ... அவர்கள் அந்த நம்பரை டெலிட் செய்துவிடுமாறும் ஜாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமண அறிவிப்புக்கு பின்னர் ஜாய் கிரில்டா இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45
இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆன மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா முன்னரே தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தனது வயிறு பெரிதாக இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இத்தனை பிரச்சனைக்கும் நடுவில் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடனும் உறவில் இருந்துவிட்டு, அதைப்பற்றி பேசாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

55
மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட பதிவு என்ன?

அதுமட்டுமின்றி விமான நிலையத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அதற்கு அவர் போட்டுள்ள கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது கனவுகளால் நிரம்பிய பைகள், நெருப்பை கக்கும் கண்கள், சீர்குழைக்க முடியாத அமைதி, நம்ம மனநிலையை தடுக்க முடியாதபோது, பெரிய வேகத்தடைகள் கூட சிறிய ஸ்டேட்மெண்ட் போல தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த இணைய வாசிகள் பலரும், கமெண்ட் செக்‌ஷனை ஆன் செய்துவைத்துவிட்டு இந்த உருட்டுகளை எல்லாம் உருட்டுங்க என பேசி வருகின்றனர். தைரியமாக கேப்ஷன் பதிவிட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், எதற்காக பயந்து கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories