செம்ம ட்விஸ்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்-பை சொல்லவுள்ளது இந்த பிரபலமா? அப்செட்டில் ரசிகர்கள்..!

Published : Dec 02, 2022, 03:20 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி, இந்த வார இறுதியை நெருங்க உள்ள நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளர் குறைந்த வாக்குகளுடன் வெளியேற்றுப்படுவார் என்கிற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அப்செட் ஆக்கியது.  

PREV
16
செம்ம ட்விஸ்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்-பை சொல்லவுள்ளது இந்த பிரபலமா? அப்செட்டில் ரசிகர்கள்..!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஐந்து சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டைகளும், சச்சரவுகளும் சற்று அதிகமாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

26

ஆனால் போட்டியாளர்கள், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை கூட யோசிக்காமல் ஒருவருக்கொருவர் முட்டி மோதி கொண்டு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அதே நேரம் சில போட்டியாளர்கள், சற்று அமைதியாக சேப் கேம் விளையாடி வரும் நிலையில், அவர்களை சத்தம் இல்லாமல் மக்கள் வெளியே அனுப்பி வருவதும் நடந்து வருகிறது.

திருமண விஷயத்தில் அப்பா கார்த்திக்கின் ஆசையை சுக்குநூறாக்கிய கெளதம்..! அதுக்குன்னு இப்படியா செய்யுறது..!
 

36

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக ஜி பி முத்து ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

46
bb tamil 6

இந்நிலையில் இந்த வாரம் நாமினேசன் பட்டியலில், கதிரவன், ரக்ஷிதா, ஜனனி, மைனா தனலட்சுமி மற்றும் பென்சில் ஆகிய 6 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல் பரவிய நிலையில் இந்த வாரமும் வழக்கம் போல் ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற உள்ளதாகவும் அவர் யார் என்கிற தகவலையும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் கணித்து கூறியுள்ளனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் ஜிபி முத்துவை சரமாரியாக பிளேடில் வெட்டிய சகோதரர்! 175 தையல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

56

இந்த வாரம் இந்த வாரம், மைனா மற்றும் குயின்சி ஆகிய இருவருமே மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாகவும், எனவே இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மைனாவை விட, குயின்சி தான் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

66

ஆரம்பத்தில் இருந்தே சேப் கேம் விளையாடி வரும் குயின்சி... பிக்பாஸ் ரசிர்கர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது தான் இவர், இந்த வாரம் வெளியேற காரணம் என கூறப்படுகிறது. இந்த தகவல் குயின்சி ஆர்மியை சேர்ந்தவர்களை அப்செட்டாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

37 வயதில் 'சந்திரலேகா' சீரியல் நடிகைக்கு ஜோடி கிடைச்சாச்சு.! வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வேதா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories