தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக் - என்ன காரணம் தெரியுமா?

Published : Dec 02, 2022, 03:09 PM IST

நவரச நாயகன் கார்த்திக்கை, தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க அணுகினாராம் லோகேஷ், ஆனால் அவர் படத்தின் கதை பிடித்திருந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

PREV
14
தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக் - என்ன காரணம் தெரியுமா?

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணையும் படம் தளபதி 67. இப்படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இப்படத்தின் நடிகை விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதால் ஏராளமான வில்லன் நடிகர்கள் இதில் நடிக்க உள்ளார்களாம்.

24

அதன்படி இதுவரை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இதுதவிர மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோரையும் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கையும் ஒரு வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் லோகேஷ்.

இதையும் படியுங்கள்... சேதுபதியாக மாஸ் காட்டிய விஜய் சேதுபதி... டிஎஸ்பி-யாக பாஸ் ஆனாரா? இல்லையா? - டுவிட்டர் விமர்சனம் இதோ

34

ஆனால் அவரோ நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனெனில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் கார்த்திக் தளபதி 67 பட வாய்ப்பை ஏற்க மறுத்தாராம். அவருக்கு காலில் பிரச்சனை இருப்பதால் நீண்ட நேரம் நிற்கமுடியாதாம். இப்படி இருக்கையில் வில்லனாக நடித்தால் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும், அதனால் அந்த பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் நடிக்க மறுத்துவிட்டாராம் கார்த்திக்.

44

தளபதி 67 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்தக்கட்ட ஷூட்டிங்க காஷ்மீரில் நடத்த உள்ளாராம். தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் தளபதி 67-ம் ஒன்று என்பதால் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் திட்டமிட்டுள்ளாராம். 

இதையும் படியுங்கள்... ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ள 450 ஆண்டு பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையின் ஸ்பெஷல் என்ன? அதன் வாடகை இவ்வளவா?

Read more Photos on
click me!

Recommended Stories