பர்ஸ்ட் ஜப்பான்; இப்போ அமெரிக்கா! நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் தடபுடலாக நடந்த திருமணம்!

Published : Aug 05, 2025, 07:20 PM IST

Nepoleon Son Dhanoosh Akshaya Marriage in American Style : நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கும் அக்சயாவிற்கும் முதலில் ஜப்பானில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து இப்போது அமெரிக்க முறைப்படி தடபுடலாக திருமணம் நடைபெற்றுள்ளது.

PREV
16
நெப்போலியன் மகன் திருமணம்

நடிகர் நெப்போலியன் திருச்சியில் பிறந்து, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த போது, 'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம் இவரை ஒரு ஹீரோவாக பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

26
அக்‌ஷயா திருமணம்

இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயசுதா, "நெப்போலியன் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதால், ஆரம்பத்தில் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலும், பின்னர் திரையில் பார்ப்பது போல் நெப்போலியன் நிஜ வாழ்க்கையில் கிடையாது, என்பதை அவருடைய தந்தை புரிய வைத்த பின்னரே, திருமணத்திற்கு சம்மதம் கூறினாராம்". இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றிலும் கூறியிருக்கிறார்.

36
அமெரிக்க முறைப்படி நெப்போலியன் மகன் திருமணம்

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே, தன்னுடைய மாமா கே என் நேரு மூலம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த, நெப்போலியன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறினார். பின்னர் பெரம்பூர் தொகுதியில் லோக்சபா எலெக்ஷனில் போட்டியிட்டு, எம்.பி-ஆனார். மத்திய இணை அமைச்சராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றிய நெப்போலியன், தன்னுடைய மகன்களின் விருப்பத்திற்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகிய நிலையில் ... அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.

46
அமெரிக்க அரசு முறைப்படி நடைபெற்ற தனுஷ் அக்‌ஷயா திருமணம்

நடிகர், அரசியல்வாதி என்பதை விட, ஒரு சிறந்த தந்தையாக இருக்க விரும்பிய நெப்போலியன்... தன்னுடைய மகன்களின் சந்தோஷத்திற்காகவும், மகன் தனுஷின் சிகிச்சைக்காகவும் அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் அங்கு ஒரு ஐடி நிறுவனத்தையும் தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக மாறினார். ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ள இவர், தன்னுடைய மகன் தனுஷ் திருமண வயதை எட்டியதால் அவருக்கு தன்னுடைய உறவினர் பெண்ணான அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.

56
தனுஷ் அண்ட் அக்‌ஷயா திருமணம்

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தனுஷ் மற்றும் அக்‌ஷயா - திருமணம் ஜப்பானில் வெகு விமர்சியாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், நெப்போலியன் மகனின் திருமண செலவு மட்டும், சுமார் 332 கோடி ஆனதாக தகவல்கள் வெளியானது. திருமணத்திற்கு பிறகு அக்‌ஷயா மற்றும் தனுஷ் ஜோடிகள் இணைந்து சில பேட்டிகள் கொடுத்த நிலையில் இப்போது இருவருக்கும் அமெரிக்க முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

66
நெப்போலியன் மகன் தனுஷ் அக்‌ஷயா திருமணம்

இருவருக்கும் அமெரிக்க சட்டப்படி நடைபெறும் திருமண வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தும் குறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க முறை திருமணம் அன்பு நண்பர்களே , உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்…! உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதிபெற்று நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துக்களோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி, எங்கள் மகன் தனுஷ்க்கும் & அக்‌ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது…! உங்களின் மேலான பார்வைக்கும் உங்களின் வாழ்த்துக்களுக்கும்..! நன்றிகள் பல கோடி..!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories