சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா? தெறிக்கவிடும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..!

First Published | Mar 6, 2021, 10:24 AM IST

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு நேற்று, மார்ச் 5 ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. 
 

nenjam marapathillai movie box office collection chennai details
பல்வேறு பிரச்சனைகள், தடைகளை, கடந்து வெளியாகியுள்ள இந்த படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் இருந்தாலும், திகில் கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் திரைக்கதையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'நெஞ்சம் மறப்பதில்லை'. தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் என்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரைத்த மாவையே திரும்பவும் அரைத்து போல், வழக்கமான பேய் படங்களில், வருவது போன்றே இந்த படத்தின் சாயல் இருந்தாலும், ஓவர் பரபரப்பு, திகில் காட்சிகள் என கொண்டு செல்லாமல் இருப்பது இந்த படத்தின் பலம்.
அடுத்த ரகுவரன் என்று கூறும் அளவிற்கு, கன கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை அள்ளியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை நந்திதா, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். ரெஜினா அழகு பேயாக வந்து, நடிப்பில் மிரட்டியுள்ளார். எனவே இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
படக்குழுவினரும், ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம், 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Latest Videos

click me!