சிக்கியது 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு... சிக்கலில் மாட்டிய நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யாப்...!

First Published Mar 5, 2021, 7:03 PM IST

இந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகை டாப்ஸி ஃபேண்டம் ஃபிலிம்ஸ்  நிறுவனத்தின் படத்தில் நடிக்க ரூ.5 கோடியை ரொக்கமாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யாப், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான டாப்ஸி மற்றும் தயாரிப்பாளர்கள் விகாஷ் பெஹல், மது மான்டெனா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
undefined
இரு தினங்களுக்கு முன்பு ஆகியோருக்கு ச் மும்பை மற்றும் புனே, டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
undefined
கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்ட அனுராக் கஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனமான ஃபேன்டம் ஃபிலிம்ஸ் தொடர்பாக சோதனை நடந்தது. அந்த நிறுவனம் தயாரித்த மன்மர்சியான் படத்தில் டாப்ஸி நடித்திருந்தார். எனவே அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
undefined
அனுராக்கின் ஃபேண்டம் ஃபிலிம்ஸ் நிறுவனம் சில பொய்யான வரவு செலவு கணக்குகளுடன் போலி பில்களை தயாரித்து வரி ஏய்ப்பில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
undefined
இந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகை டாப்ஸி ஃபேண்டம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ரூ.5 கோடியை ரொக்கமாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அனுராக் காஷ்யாப், டாப்ஸிடம் தனித்தனியே விசாரணை நடத்தவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
click me!