ரஜினிக்காக மீண்டும் பீஸ்ட் பார்முலாவை கையில் எடுத்த நெல்சன்... இணையத்தில் கசிந்த ஜெயிலர் படக்கதை..!

Published : Feb 28, 2023, 10:05 AM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

PREV
14
ரஜினிக்காக மீண்டும் பீஸ்ட் பார்முலாவை கையில் எடுத்த நெல்சன்... இணையத்தில் கசிந்த ஜெயிலர் படக்கதை..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வஸந்த் ரவி, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே ஜெயிலர் முக்கியமான படமாக அமைந்துள்ளது. ஏனெனில் இதற்கு முன் வெளிவந்த அவர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறிப்பாக ரஜினிக்கு அண்ணாத்த படம் கைகொடுக்கவில்லை. அதேபோல் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படமும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதனால் ஜெயிலர் படம் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து இருவரும் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வில் திடீர் டுவிஸ்ட்... நடிகர் விவேக்கின் காட்சிகளுக்கு உயிர்கொடுக்கும் ஷங்கர்..!

34

இந்நிலையில்  ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளாராம் நெல்சன். அதுவும் ஒரே இரவில் நடக்கும் கதை என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் இரவில் தான் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படமாக இதனை கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறாராம் நெல்சன்.

44

நெல்சன் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் ஒரே நாளில் நடக்கும் கதை தான். அப்படத்தின் பார்முலாவை தான் தற்போது ஜெயிலர் படத்திற்கும் அவர் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் எந்தெந்த இடங்களில் கோட்டைவிட்டாரோ அது ஜெயிலர் படத்தில் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறாராம் நெல்சன். இணையத்தில் கசிந்துள்ள ஜெயிலர் படம் குறித்த தகவல் தற்போது படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Vadivelu : இனி வெறும் வடிவேலு இல்ல ‘டாக்டர்’ வடிவேலு... வைகப்புயலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories