தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு வந்தவர் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு இயக்குனராக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததன் காரணமாக தற்போது முழுநேர நடிகராக களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார் மாரிமுத்து. ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலிலும் மாஸ் காட்டி வருகிறார்.