Nayanthara Mehndi Ceremony : மெஹந்தி பங்க்ஷன் உடன் கோலாகலமாக துவங்கிய விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்

Published : Jun 08, 2022, 05:07 PM IST

Nayanthara Mehndi Ceremony : நேற்று நயன்- விக்னேஷ்  திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு தண்ணீர் பாட்டிலில் மருதாணி நிகழ்ச்சியின் குறித்த தகவல் அழகாக அச்சிடப்பட்டுள்ளது.

PREV
14
Nayanthara Mehndi Ceremony : மெஹந்தி பங்க்ஷன் உடன் கோலாகலமாக துவங்கிய விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்
nayanthara vignesh shivan wedding

நானும் ரவுடி தான் மூலம் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

24
nayanthara vignesh shivan wedding

திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கிடையே விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

34
NAYANTHARA VIGNESH SHIVAN WEDDING

இவர்களது திருமணத்திற்கு  பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. மேலும் டிரெஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பத்திரிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளதாம். திருமணத்திற்கு வருபவர்கள் கைபேசி கொண்டு வர தடையும் கூறப்பட்டுள்ளதாம்..

44
NAYANTHARA VIGNESH SHIVAN WEDDING

இந்த நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு  மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
 

click me!

Recommended Stories