நடிகை சமந்தாவும், நயன்தாராவும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருந்து வருகின்றனர். இருவரும் சமீபத்தில் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் அவர்களது நட்பு மேலும் வளர்ந்தது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நடிகை நயன்தாராவின் திருமணத்தில் நடிகை சமந்தா கலந்துகொள்ள மாட்டார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது குஷி படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறாராம். தான் செல்லாவிட்டால் படக்குழுவுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதன் காரணமாக நயன்தாரா திருமணத்துக்கு செல்லவில்லையாம்.
சமந்தாவின் குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.