விஜய் 66 -ல் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..வேறலெவல் அப்டேட்!

First Published Jun 8, 2022, 3:55 PM IST

விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தில் ஒரு சிறிய காமியோ ரோலில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Vijay 66

சமீபத்தில் நெல்சன் பீஸ்ட்  படம் ரசிக்கற்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்றது. மிதமான வசூலை பெற்ற இந்த படத்தை அடுத்து இளையதளபதி விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார்.  தெலுங்கு படமாக 'மஹர்ஷி' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் இதில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் மூலம் நேரடி டோலிவுட் நாயகனாகிறார் விஜய். சமீபகாலமாக ஆக்சன் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த விஜய் 66 வது படம் முழு நீள சென்டிமெண்டாக இருக்கும் என தெரிகிறது.

Vijay 66

முந்தைய படத்தில் தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டம் போட்டிருந்த விஜய். இந்த படத்தில் புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தயாரிக்கப்படும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.  தமன் முதல் முறையாக விஜய்க்கு இசையமைப்பதால் இதன் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. அதோடு விஜய் 66 குறித்து சமீபத்தில் பேசிய தமன், தளபதி 66 பாடல்களை கட்டாயம் சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுப்பேன் என சூளுரைத்துள்ளார்.

Vijay 66

குடும்ப உறவுகள் சார்ந்த இத படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.  இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதை அடுத்து முழு படமும் சென்னையில்  நடைபெற்று வருகிறது.

vijay 66

விஜய் 66 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி 66 படத்தில் காமியோ ரோலில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார், நடிகர் மகேஷ் பாபு நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல நண்பர்களாக இருக்கும் இருவரும் ஓரே திரையில் வரவிருக்கும் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

click me!