கோடிகளை குவிக்கும் விக்ரம்..உயிர்பெறுமா மருதநாயகம்?

First Published Jun 8, 2022, 3:01 PM IST

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடைக்கும் மருதநாயகம் குறித்த எதிர்பார்ப்பு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

vikram

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து விக்ரம் உருவாகி பட்டையை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நட்சத்திரங்கள் ஜொலித்தன. 5வது நாள் முடிவில் சுமார் ரூ. 200 கோடியை வசூலாக பெற்றுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நாட்களில் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெறும் என தெரிகிறது.

Marudhanayagam

இந்நிலையில் கமலின் கனவு படமான மருது நாயகம் மீண்டும் உயிர் பெறுமா என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 1997ம் ஆண்டு துவங்கப்பட்ட மருதநாயகம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.   எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ஷூட்டிங்கை காண இங்கிலாந்து மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார். அவர் சுமார் 20 நிமிடங்கள் வரை செட்டில் இருந்தார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் உடனிருந்தனர்.

Marudhanayagam

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்பட்ட மருதுநாயகம் இந்த படத்தின் பட்ஜெட்டில் ரூ.80 கோடியாக இருந்தது. விஷ்ணுவர்தன் , அம்ரிஷ் பூரி மற்றும் நசிருதீன் ஷா உட்பட அதன் முக்கிய நடிகர்கள் மற்றும் குழுவினர்  முதலில் ஒன்றிணைத்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார், ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Marudhanayagam

கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் இயக்கி, தயாரிக்க முடிவெடுக்கப்பட்ட   இதற்கான ஸ்கிரிப்டை நாவலாசிரியர் சுஜாதாவுடன் இணைந்து கமல் எழுதினார். திரைப்படம் பல்வேறு தயாரிப்பு சிக்கல்களைச் சந்தித்தது, இறுதியில் படத்தின் இணைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு சர்வதேச நிறுவனம் பின்வாங்கியது. பின்னர் 1999 -ல் மீண்டும் இந்தத் திட்டத்தை புதுப்பிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், திரைப்படம் தயாரிப்பைத் தொடரவில்லை. இந்நிலையில் ராஜ்கமலுக்கு இந்த முறை அதிக லாபம் வந்தால் மருது நாயகம் உயிர் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!