விக்ரமை பார்த்த ஷங்கர்..என்ன சொன்னார் தெரியுமா?

Published : Jun 08, 2022, 01:49 PM IST

கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில், விக்ரம் வாவ் பார்க்க அருமை, ஒரு உண்மையான புராணக்கதை போல .மிகப்பெரிய முயற்சி என பாராட்டியுள்ளார்.

PREV
14
விக்ரமை பார்த்த ஷங்கர்..என்ன சொன்னார் தெரியுமா?
Vikram

சமீபத்தில் வெளியான விக்ரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இந்த படத்தை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு உலக நாயகனுக்கு நியூ என்ட்ரியாக அமைந்த  'விக்ரம்' பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை தொட்டது . விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

24
vikram

இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. வெறும் 5 நாட்களில் இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ள  இந்த படத்தை தந்ததற்காக லோகேஷ் கனகராஜை பாராட்டிய கமல் . அவருக்கு விலை உயர்ந்த லக்ஷுரி காரை பரிசாக வழங்கியதுடன் பாராட்டி கடிதமும் எழுதி இருந்தார். அதோடு இப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு தலா ஒரு அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கினார் கமல்.

34
vikram

இந்த படத்தில் ரோலாக்ஸாக நடித்த சூர்யாவை பாராட்டிய கமல் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ள அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே சூர்யா என்ட்ரி 5 நிமிடங்களாக இருந்தாலும் அது பலரது மனதிலும் பதிந்து விட்டது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் விக்ரம் படம் குறித்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்.

44
vikram

கமலாலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில், விக்ரம் வாவ் பார்க்க அருமை,  360° பெரிய திரையில் துப்பாக்கி சூடு, ஒரு உண்மையான புராணக்கதை போல .மிகப்பெரிய முயற்சி மற்றும் பாணியிலுள்ளது.நடிகர்கள் மற்றும் முழு குழுவிற்கும் பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.சங்கர் கமல் , அனிருத், லோகேஷ் கனகராஜை டேக் செய்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories