நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஓணம் ரொமான்ஸ்... வைரலாகும் போட்டோஸ்...!

 தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கொச்சி பறந்து சென்ற நயனும், விக்னேஷ் சிவனும் அங்கு ஜாலியாக ஓணம் கொண்டாடும் ரொமாண்டிக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.. 

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு காதலித்து வருகிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும்..

'நானும் ரவுடிதான்" படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது. கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார்.
அப்படித்தான் கொச்சியில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காகவும் தனது காதலர் விக்னேஷ் சிவனை நயன், கொச்சி அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து கொச்சி நோக்கி தனி விமானத்தில் இருவரும் ஜோடியாக பறந்தனர். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தற்போது கேரள புடவையில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் செல்ல ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. மேட்சிங் மேட்சிங் காஸ்ட்யூமில் இருவரும் கண்படும் அளவிற்கு அழகாக இருக்கிறார்கள்.
கொச்சியில் குதூகலமாக ஓணம் கொண்டாடும் லவ் பேர்ட்ஸ்...
காதலன் விக்னேஷ் சிவன் முகம் பார்த்து புன்னகைக்கும் அழகு தேவதை நயன்தாரா
எங்கு சென்றாலும் உன்னை நான் கைவிட மாட்டேன் என கைபிடித்து சத்தியம் செய்கிறாரோ?... விக்னேஷ் சிவன்

Latest Videos

click me!