நடிகை வனிதாவை அவருடைய குடும்பம் கண்டு கொள்ளவில்லை என்றாலும், அண்ணன், அம்மா, தங்கைகள், அப்பா என, அனைவருடைய பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
அப்பாவுடன் சேர்ந்து அருண் விஜய் அவருடைய வீட்டிற்கு வரவேற்கிறார் வாங்க போகலாம்
இவருக்கு முதல் ஆளாக தன்னுடைய வாழ்த்துக்களை கூறி, தந்தையுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்றையும் வனிதா வெளியிட்டுள்ளார்.
இவருடைய குடும்பத்தினர் இவரை வெறுத்தாலும், வனிதா ஒரு முறை கூட தன்னுடைய குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருப்பது பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
வனிதா - பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆரம்பத்தில், முறையாக மனைவியை பீட்டர் பால் விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக, பல பிரச்சனைகளை சந்தித்தார்.
வனிதாவின் திருமண பிரச்சனைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாதவர்கள் கூட, இவரை விமர்சித்து பேசி பிரபலமாகி கொண்டனர்.
மேலும் சமீபத்தில் தான், பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வனிதா தன்னை ஒரு தாய் போல் பார்த்து கொண்டதாக உருகினார் பீட்டர் பால் என்பதும் குறிப்பிடத்தக்கது.