ஓணம் கொண்டாட்டம்: தனி விமானம் மூலம் விக்கியுடன் கொச்சி பறந்த நயன்தாரா... வைரலாகு புகைப்படம்...!

First Published | Aug 31, 2020, 11:26 AM IST

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

35 வயதனாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. முன்னணி நடிகர்களின் படம் என்றாலே நயன்தாரா கால்ஷீட் முக்கியம் என்பது போல் ஆகிவிட்டது.
அப்படித்தான் கடந்த ஆண்டு வெளியான பிகில், தர்பார் இரண்டு திரைப்படங்களிலும் நயன்தாராவிற்கு முக்கியத்துவமே இல்லை என்றாலும், ஸ்டார் ஹீரோக்களுக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருப்பார்கள். அவரும் வந்ததுக்கு ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுவிட்டு போய் இருப்பார்கள்.
Tap to resize

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் முதன் முறையாக நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கபடாததால் படம் வெளியாகாமல் உள்ளது.
அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல், அவருடைய தயாரிப்பில் நெற்றிக்கண், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என அம்மணி கைவசம் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் நயன்தாராவை அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் கேட்டு வருகின்றனர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சென்னையில் காதலர் விக்னேஷ் சிவனுடன் வசித்து வந்த நயன்தாரா தற்போது தனி விமானம் மூலம் கொச்சி பறந்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் தான் சென்னையிலிருந்து கொச்சிக்கு தனி விமானம் மூலம் காதலர் விக்னேஷ் சிவனையும் அழைத்துக்கொண்டு பறந்துள்ளார் நயன்தாரா.
இதுகுறித்து நயன்தாராவின் ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி ஓணம் கொச்சி என்ற பதிவுடன் வெளியிடப்பட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
ஸ்டைலிஷ் கூலிங்கிளாஸ் உடன் கெத்தாக தனி விமானத்தில் இருந்து இறங்கி நடந்து வரும் நயன்தாரா போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!