காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக லட்சங்களை செலவழித்த நயன்... எவ்வளவு தெரியுமா?

First Published | Sep 28, 2020, 11:15 AM IST

சமீபத்தில் காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நயன்தாரா படு கிராண்டாக கொண்டாடினார் இல்லை. அதற்காக அவர் எத்தனை லட்சங்களை செலவழித்தார் என்ற தகவல் கசிந்துள்ளது. 

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் உருகி, உருகி காதலித்து வருகின்றனர்.
Tap to resize

'நானும் ரவுடிதான்" படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது.
படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார்.
சமீபத்தில் கூட தனி விமானத்தின் ஓணம் கொண்டாட கொச்சி சென்றது, அங்கிருந்து குடும்பத்துடன் கிளம்பி கோவா சென்றது, மீண்டும் தனி விமானத்தில் சென்னை வந்தது என கொரோனா காலத்திலும் விக்கி செம்ம ஜாலியாக வாழ்கிறார்.
தற்போது கூட விக்னேஷ் சிவனின் 35வது பிறந்த நாளை நயன்தாரா தடபுடலாக கொண்டாடினார். கேக் கட்டிங், ஆடல், பாடல் என பிறந்தநாள் விழா கலைகட்டியது.
விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக மட்டும் நயன்தாரா செலவு செய்தது 25 லட்சம் ரூபாயாம். இதைக்கேட்ட பலருக்கும் காதில் புகை வரும் அளவிற்கு காண்டாகி இருக்கும். கிடைச்சால் இப்படி ஒரு லவ்வர் கிடைக்கனும் என ரசிகர்கள் பொறாமையில் பொங்குகின்றனர்.

Latest Videos

click me!