நடிகை நயன்தாரா மதுரையில் நடந்த பெமி 9 நிகழ்ச்சியில் 6 மணிநேரம் தாமதமாக வந்து... தொழிலாளர்களை அலைக்கழித்துள்ள தகவல் வெளியாகி, விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது இருபது வருட சினிமா வாழ்க்கையில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும், அடுத்தடுத்து 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட 6 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.
26
Controversial Actress Nayanthara
முன்னணி நடிகையாக மட்டும் அல்ல ஒரு சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் வலம் வரும் நயன்தாரா. குறிப்பாக கடந்த ஆண்டு, நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தின் வீடியோ இடம்பெற்றதால், தனுஷ் தரப்பில் இருந்து ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்க்கு நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஜனவரி 22-ஆம் தேதி வெளியாக உள்ளது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு தரப்பு நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பு, அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. நயன்தாரா திரையுலகை தொடர்ந்து, ஒரு பிஸ்னஸ் வுமனாகவும் ஜொலித்து வருகிறார். ஏற்கனவே அழகு சாதன பொருட்கள், லிப் கேர் பொருட்களின் நிறுவனங்களை நிர்வகித்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு ஃபெமி9 நாப்கின் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.
46
Nayanthara Attent function 6 hours Late
இதில் நயன்தாரா காலை ஒன்பது மணிக்கு கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில், ஆறு மணி நேரம் தாமதமாகவே கணவர் விக்னேஷ் சிவனுடன் அங்கு வந்து சேர்ந்துள்ளார். இதன் காரணமாக மதியம் ஒரு மணிக்கு முடிவடைய இருந்த நிகழ்ச்சி. மாலை ஆறு மணி வரை நீடித்தது. இதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் சங்கடங்களுக்கு ஆளானார்கள்.
நேற்றைய தினம் ஃபெமி9 நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவின் கீழ் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
66
Nayanthara Show her Arrogance
பொதுவாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கை நீட்டி காசு வாங்கி விட்டால் நேரம் தவறாமையை கடைபிடிக்கும் நயன்தாரா, தன்னிடம் வேலை செய்பவர்களை இப்படி காக்க வைத்து அலைக்கழிக்கலாமா? என்றும் இப்படி நடந்து கொள்வது நயன்தாராவின் அதிகார திமிரை வெளிப்படுத்துவது போல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.