தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து, பாலிவுட் திரையுலகில் நுழைந்து படம் நடிக்க துவங்கி விடுகிறார்கள். அவர்களை பற்றியும், அவர்களது வரவிருக்கும் படம் குறித்தும் பார்க்கலாம் ...
அதே போல் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா படுகோனே அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பான் இந்தியா படமாக வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி' பாடம் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் நடனமாடச் செய்த ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'மிஷன் மஜ்னு'வில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள படத்தின் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்புகளை கைப்பற்றும் நடிகையாக உள்ளார். தர்மா புரொடக்ஷனின், சார்பில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'யோதா' படத்தில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, 'பார்ஸி' என்கிற வெப் சீரிஸில் ஷாஹித் கபூருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவை தவிர, சில ஹிந்தி படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!
இவரை தொடர்ந்து நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லீ... பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள 'ஜவான்' படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் நடிகை 'பீஸ்ட்' பட நடிகை பூஜா ஹெக்டேவும் உள்ளார். ஏற்கனவே சில பாலிவுட் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தற்போது பூஜா சல்மான் கானுடன் 'கபி ஈத் கபி தீபாவளியும்', ரன்வீர் சிங்குடன் 'ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.