கன்னட படங்கள் ஹிட் அடித்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரபல நடிகர் கிச்சாசுதீப் , ஹிந்தி மட்டும் தேசிய மொழியல்ல என்பது போல பேசி இருந்தார். இந்த கருத்து குறித்து பிரபல நடிகர் அஜய் விமர்சனம் செய்ய, இருவருக்கும் ட்விட்டரில் போரே நடந்தது. பின்னர் அதற்கான விளக்கம் அளித்து இருந்தார் சுதீப்.
மேலும் செய்திகளுக்கு..முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..
இந்நிலையில் மீண்டும் ஒரு பூகம்ப கருத்தை வெளியிட்டுள்ளார் சுதீப். வடக்கு மற்றும் தெற்கு இடையே உள்ள தடைகுறைந்து வருவதாக கூறியவர், முன்பு தென்னிந்திய படங்கள் வடக்கே வரும் ஆனால் சேட்டிலைட் டிவில்தான் வரும். டப்பிங் செய்யப்பட்டு வெளியான படங்கள் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.