முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..

Published : Jul 19, 2022, 05:33 PM ISTUpdated : Jul 20, 2022, 02:10 PM IST

நித்யா மேனன் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

PREV
14
முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..

தனுஷ் தற்போது நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக மிளிர்ந்து வரும் நித்யா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

24

ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற நித்தியா மேனன் 2006 ஆம் ஆண்டு  கன்னட திரைப்படத்தில்  முதல் முறையாக தோன்றியிருந்தார். அப்போது அவருக்கு 17 வயது. பின்னர் மலையாளத்தில் ஆகாச கோபுரம் தெலுங்கில்  அல மொடலைண்டி, தமிழில் 180 , இந்தியில்  மிஷன் மங்கள் என அனைத்து மொழிகளிலும் அறிமுகமானார்.

மேலும் செய்திகளுக்கு...புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!

34

நித்யா மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் மலையாளத்தில் 19 என்னும் படத்திலும், தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் ஆறாம் திருக்கல்பனை என்னும் மலையாள படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேனன் கடைசியாக பீம்லா நாயக் என்னும் தெலுங்கு படத்தில் தோன்றியிருந்தார். அதோடு அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான மாடர்ன் லவ் என்னும் சீரிஸிலும் நடித்த வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்

44

இந்நிலையில் நித்யா மேனன் குறித்த புதிய தகவலாக அவரது கல்யாண செய்தி தான் வெளியாகியுள்ளது.  தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்‌ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இது காதல் திருமணம் என்றும் தங்களது பெற்றோர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories