ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் நயன்தாராவின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

First Published | Feb 24, 2021, 12:30 PM IST

தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாக, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. 

அந்த வகையில் தற்போது, நயன்தாரா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான 'இருமுகன்' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய திரைப்படம் இருமுகன்.
Tap to resize

சயின்ஸ் பிக்சன் படமான இதில், நடிகர் விக்ரம் மூன்றாம் பாலினத்தவராகவும், ஹீரோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார். 'இருமுகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நயன்தாரா- நித்யா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், சீனிவாசன் படதொகுப்பில், ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் இப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் மற்றும் நயன்தாரா, ஆகியோர் ஏற்று நடித்த கேரக்டர்களில் நடிக்க உள்ளார்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே போல் இந்தி ரீமேக்கை, இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குவாரா? அல்லது வேறு யாரேனும் இயக்குவார்களா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தற்போது விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் 'எனிமி' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Latest Videos

click me!