'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடல் பாடல் தான் தற்போது யூ டியூபில் வைரல் ஹிட் அடித்துள்ளது. இந்த ஒற்றை பாடல் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கிராமிய கலைஞர் கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். சிறு வயதிலிருந்தே பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம். எனவே விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு வீடுகள் என பல பாடல்களை பாடி முறையாக கிராமிய பாடல்களை பாட கற்று தேர்ந்தார்.
சில சினிமா பாடல்களை இவர் ஏற்கனவே பாடி இருந்தாலும் இவருக்கு தனி அங்கீகாரத்தை கொடுத்துள்ளது 'கண்டா வரச்சொல்லுங்க' பாடல். இந்த பாடலை பாடிய அனுபவம் குறித்து அவர் கூறுகையில், இதற்கு முன் பல நாட்டுப்புற பாடல்கள் வைத்த ஷூட்டிங் நடைபெற்ற இருந்தாலும், அவை சிறிய அளவில் தான் இருக்கும். ஆனால் இது சினிமா பாடல் என்பதால் மிகப்பெரிய அளவில் இருந்ததாக மெய்சிலிர்க்க கூறியுள்ளார்.
அதே போல் இந்த பாடல் பாடிய அனுபவம் குறித்து இவர் கூறுகையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் எழுதியிருந்த வரிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், அவர் மனதுக்குள் எவ்வளவு போராட்டங்கள், சங்கடங்கள், வேதனைகள் இருந்தது என்பதை இந்த பாடல் வரிகள் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாடலுக்கு கிடாக்குழி மாரியம்மாள் குரல் கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலிருந்தே பாடி வரும் இவருக்கு 50 வயதில் தான், 'கர்ணன்' படத்தில் பாடியதால் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளதாக, பெருமையாக தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை தனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் இதற்க்கு முக்கிய காரணமாக இருக்கும், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.