விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டிக்கு நடுவே கலகலப்பான காமெடியுடன் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கலக்கி வரும் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதை வென்ற ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலாய்க்க நினைப்பவர்கள் கூட ‘பச்சை மண்ணு’என விலகி செல்லும் அளவிற்கு கலகலப்பான பேச்சு, புன்னகையால் கட்டிப்போட்டு வருகிறார் ஷிவாங்கி.
இப்படி ரசிகர்களின் பேவரைட் காமெடி இளவரசியான ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ள நிலையில், சுமார் இரண்டே மாதத்தில், இவருக்கு ஒரு மில்லியன் ஃபாலோவார்ஸ் கிடைத்துள்ளனர். எனவே ஷிவங்கியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 மில்லியனாக மாறியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கி, ஹீரோயின்களையே மிஞ்சும் அளவில் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் கிடைத்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.