நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!

Published : Nov 30, 2024, 09:17 AM IST

தென்னிந்திய சினிமாவில், மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் அதிக சம்பளம் வாங்கும் 7 மலையாள நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
18
நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!

நடிப்பைப் பொறுத்தவரை மலையாள சினிமாவில் திறமைக்குப் பஞ்சமில்லை. கேரளாவைச் சேர்ந்த நடிகைகள் மலையாளத் திரையுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். மேலும் அதற்க்கு ஏற்றாப்போல் தங்களுடைய சம்பள விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  அதிக சம்பளம் வாங்கும் 7 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

28
Nayanthara

நயன்தாரா

நடிகை நயன்தாரா மலையாள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை எடுத்தவர். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து, இவருடைய மார்க்கெட்டை உயர்த்தியது. தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் நயன்தாரா தான் உள்ளார். ஒரு படத்திற்கு 7 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

மீடியாவே வேண்டாம்! சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் அதிரடி முடிவு - ஏன் தெரியுமா?

38
Manju Warrier

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் எல்லைகளைக் கடந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் 'வேட்டையன்' படத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'விடுதலை' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக 3 கோடி ரூபாய் வரை இவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

48
Parvathi

பார்வதி திருவோத்து

மலையாள திரையுலகின் திறமையான நடிகையாக பார்க்கப்படும் பார்வதி திருவோத், சம்பளத்தை விட, கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். தயாரிப்பாளரின் கஷ்டங்களை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ற போல் தன்னுடைய படத்தின் சம்பளத்தை நிணயிக்கிறார். இவர் மலையாள திரையுலகில் 35 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

சீரியலில் ஹீரோயின்களுக்கு தான் டிமாண்ட் ! ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்கும் சன் டிவி நாயகி யார் தெரியுமா?
 

58
Amala Paul

அமலா பால்

மலையாள திரையுலகைச் சேர்ந்த அமலா பால், பிற மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். சிறப்புத் தோற்றத்திற்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் இவர், முன்னணி வேடங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

68
Samyuktha Menon

சம்யுக்தா மேனன்

மலையாள சினிமாவில் அறிமுகமான சம்யுக்தா மேனன், தற்போது பிற மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், மிக குறுகிய காலத்திலேயே தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் தான் நடிக்கும் படங்களுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

கல்யாணம் எப்போ? திருப்பதி கோவிலில் வைத்து அறிவித்த கீர்த்தி சுரேஷ்!

78
Aishwarya Lekshmi

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, ஒரு படத்திற்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இவர் தமிழிலும் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படஙக்ளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

88
Kalyani Priyadharshan

கல்யாணி பிரியதர்ஷன்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், ஒரு படத்திற்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. பொதுவாக தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை ஒப்பிடும் போது மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு குறைவாகவே சம்பளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் 7 பேர் தான் 50 லட்சத்திற்கு மேல் வாங்கும் நடிகைகள் என கூறப்படுகிறது.

டீன் ஏஜ்ஜை கடந்தாச்சு! 20-ஆவது பிறந்தநாளை செம்ம Vibe உடன் கொண்டாடிய அனிகா சுரேந்திரன்!

Read more Photos on
click me!

Recommended Stories