Published : Nov 30, 2024, 08:07 AM ISTUpdated : Nov 30, 2024, 08:09 AM IST
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல், இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த சீரியலின் நாயகி கேப்ரியல்லா தற்போது மீடியாவை விட்டே விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கி, காஞ்சனா, ஐரா போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தும், டிக் டாக் வீடியோஸ் மூலமாகவும் மிகவும் பிரபலமானவர் 'கேப்ரியல்லா'. இவர் கருத்தாக பேசி வெளியிடும் வீடியோக்களுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அதிரடியாக 2021-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் கதாநாயகியாக மாறினார்.
25
Gabriella Quit Media
கருப்பாக இருப்பதால் சில அவமானங்களை சந்திக்கும் எதார்த்தமான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல், ஒரு கிராமத்து பெண் பல சிக்கல்களை கடந்து எப்படி தான் ஆசைப்பட்ட IAS பதவியை அடைகிறார் என்பதே சீரியலில் கதைக்களம். 'சுந்தரி' சீரியலின் முதல் பாகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகம்... ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக துவங்கியது.
இந்த சீரியலில் கேப்ரியல்லா செலஸ் நாயகியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஜிஷ்ணு மேனன் முதல் பாகத்தில் நடித்திருந்தார். இரண்டாவது பாகத்தில் கிருஷ்ணா நடித்துள்ளனர். முதல் கணவர் தன்னை ஏமாற்றியதை தொடர்ந்து... சுந்தரி இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைய உள்ளார். இதோடு சீரியலுக்கு மொத்தமாக எண்டு கார்டு போட சீரியல் குழு முடிவு செய்துள்ளது.
45
Gabriella Announced Pregnancy
'சுந்தரி' சீரியல் முடிவடைய உள்ள நிலையில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு கேப்ரியல்லா செலஸ் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். இதை தொடர்ந்து மீடியாவில் இருந்தே விலக உள்ளதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு இவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மீடியாவில் இருந்து விலகுவதால் "நன்றி சென்னை... மீண்டும் அன்போடு சந்திக்கிறேன்'. மீடியாவில் இருந்து விலகுகிறேன் என ரயில் நிலையத்தில் இருந்து போஸ்ட் போட்டுள்ளார். எனவே இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளார் என்பது தெரிகிறது.
கேப்ரியல்லாவுக்கு துணை இயக்குனர் சுரளியோடு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில்... நீண்ட இடைவெளிக்கு பின்னர் கர்ப்பம் ஆகியுள்ளார். எனவே தான் சில காலம் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார். எனவே ரசிகர்களுக்கும் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி, உடல் நலனை கவனித்து கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.