Nagi Reddy
நூறாண்டு கடந்த மிக பழமையான ஒரு திரைத்துறை தான் கோலிவுட் திரைத்துறை. அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில், தென்னிந்தியாவின் பல மொழி திரைப்படங்களின் கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு பணிகளை நடத்தியது அப்போதைய மதராஸ் பட்டினத்தில் நான் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை அதுதான். கிட்டத்தட்ட 1980களின் இறுதி வரை மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் படபிடிப்புகள் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் தற்போதைய சென்னையில் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்த ஒரு சினிமா ஸ்டூடியோ சென்னையில் இருந்து வந்தது.
நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு நாகர்ஜுனா கொடுக்க உள்ள காஸ்ட்லீ பரிசு என்ன தெரியுமா?
Vijaya Vauhini Studio
அந்த சினிமா ஸ்டுடியோ தான் நாகிரட்டி சென்னையில் அமைத்த "விஜயா வாகினி ஸ்டுடியோஸ்". இன்றளவும் சென்னையின் மிகப்பெரிய டிரேட் மார்க்க்காக திகழ்ந்து வருகிறது இந்த விஜயா வாகினி என்றால் அது மிகையல்ல. இப்போது சினிமா ஸ்டுடியோவாக இருந்த பல இடங்கள் வணிக வளாகங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மாறிவிட்டது என்றாலும், விஜயா வாகினி சினிமா ஸ்டுடியோவின் பெருமை இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
Cinema Shooting
ஆந்திராவை சேர்ந்த நாகிரிட்டியின் குடும்பத்தில் பலர் சென்னையில் வசித்து வந்த நிலையில், மேல் படிப்புக்காக சென்னை வந்த அவருக்கு இவ்விடம் மிகவும் பிடித்து போய் தனது அண்ணனுடன் இணைந்து தொழில் ஒன்றை செய்ய முயன்றுள்ளார். அதன்பிறகு நாடகங்களின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமா ஸ்டுடியோ கட்ட ஆசைப்பட்டு அப்போது சென்னையின் மையப்பகுதியாக திகழ்ந்து வந்த வடபழனியில் மிகப்பெரிய சினிமா ஸ்டுடியோ ஒன்றை அவர் எழுப்பினார். 1948ம் ஆண்டு விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் வாகினி ஸ்டூடியோவோடு இணைந்து விஜயாவாகினி ஸ்டுடியோ என்று ஆனது. அப்போதே கிட்டத்தட்ட 13 மாடிகள் அமைக்கப்பட்டு அதில் திரைப்பட சூட்டிங் நடந்து வந்திருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்டுடியோவாக திகழ்ந்தது விஜயா வாகினி என்றால் அது மிகையல்ல.
Ramoji Film City
ஆனால் இப்போது விஜயா வாகனி வணிக வளாகங்களாகவும் மருத்துவமனைகளாகவும் மாறி உள்ள நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்டுடியோவாக திகழ்ந்து வருகிறது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி. சுமார் 1666 ஏக்கரில் பறந்துள்ள இந்த ஸ்டூடியோ அண்மையில் மறைந்த ராமோஜிராவின் தலைமையில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று பாலிவுட் திரை உலகைத் தவிர தென்னகத்தின் பல திரைப்படங்கள் இந்த ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பணமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இளம் நடிகருடன் இணைந்த ஜேசன் சஞ்சய்; அதிரடியாக வெளியான மோஷன் போஸ்டர்!