சீரியலில் ஹீரோயின்களுக்கு தான் டிமாண்ட் ! ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்கும் சன் டிவி நாயகி யார் தெரியுமா?

First Published | Nov 29, 2024, 6:01 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சீரியலில் நடித்து வரும் நடிகை ஒரு நாளைக்கு அதிக பச்சமாக ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக மறைமுகமாக கூறியுள்ளார் அந்த சீரியலில் நாயகன்.
 

Serial Actors

சமீப காலமாக பல சீரியல்கள் கதாநாயகியை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல், சுந்தரி, மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, மலர், போன்ற சீரியல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெறுகிறது. சன் டிவி தொடர்கள் பெண்களை முன்னிலை படுத்தி தொடர்கள் எடுத்து வருவதை பலர் புகழ்ந்தும் வருகின்றனர்.

Serial actress Salary

விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பெண்கள் கதாபாத்திரத்தை முன்னிலை படுத்தும் விதத்தில் தான் எடுக்கப்படுகின்றன.

எனவே சீரியலை பொறுத்த வரை பெண்கள் தான் ஆண்களை காட்டிலும் அதிகம் சம்பளம் வணங்குபவர்களாக உள்ளனர். ராதிகா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்ற சினிமா நடிகைகள் சீரியல் பக்கம் கவனம் செலுத்திய போது கூட... கதாநாயகர்களை விட, இவர்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது.

நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்; அப்பா பற்றி உருக்கமான பதிவு!

Tap to resize

Moondru Mudichu Serial

ஆனால் சமீப காலமாக ஓரிரு திரைப்படங்கள் நடித்து விட்டு, பட வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் ஒதுங்கும் நடிகைகள் கூட ஹீரோயினாக நடிக்க லட்ச கணக்கில் சம்பளம் கேட்டு வருகிறார்களாம். ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு இருக்கும் கிரேஸ் காரணமாக தயாரிப்பு தரப்பும் அவர்கள் டிமாண்ட் செய்யும் பணத்தை எடுத்து கொடுக்கிறது.
 

Swathi Konde Salary

இந்நிலையில் அண்மையில் 'மூன்று முடிச்சு' சீரியலின் நாயகன் நியாஸ் கான் கொடுத்த பேட்டியில், சீரியல் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சினிமாவில் நடித்து விட்டு சிலர் சீரியலுக்கு வரும் போதே.. அல்லது ஹிட் சீரியல்களில் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில் சிலர் தங்களுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் கூட பெறுகிறார்கள். 

கல்யாணம் எப்போ? திருப்பதி கோவிலில் வைத்து அறிவித்த கீர்த்தி சுரேஷ்!

Tamil serial update

அதே போல் சீரியலை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு தான் அதிக சம்பளம் கொடுப்பார்கள். கதாநாயகனுக்கு எப்போதுமே சம்பளம் குறைவு தான் என்று கூறியுள்ளார். நியாஸ் கான் ரூ.1 லட்சம் வாங்கும் ஹீரோயின் என கூறுவது நடிகை ஸ்வாதி கொண்டவை தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே கயல் சீரியல், சுந்தரி சீரியல் ஆகியவற்றில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் சம்பளம் வாங்கினாலும் இந்த அளவுக்கு யாரும் அதிகம் வாங்கியதில்லை என்றே கூறப்படுகிறது.

Latest Videos

click me!