நாக சைதன்யா தனது காதலி சோபிதா துலிபாலாவை டிசம்பர் 4 ஆம் தேதி, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அக்கினேனி குடும்பத்தில் இந்த மகிழ்ச்சியான செய்திகளுக்கு மத்தியில், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டாவது மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த தகவலையும் நாகர்ஜுனா பகிர்ந்து கொண்டார்.
25
Nagarjuna Costly Gift
அடுத்தடுத்து திருமண கொண்டாட்டங்களால் நாகர்ஜுனா குடும்பம் களைகட்ட உள்ள நிலையில், நாகார்ஜுனா தற்போது தன்னுடைய மகன் நாக சைதன்யா திருமணத்திற்கு சொகுசு கார் ஒன்றை பரிசளிக்கு முடிவு செய்துள்ளார்.
இதற்காக தற்போது நாகார்ஜுனா, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன லெக்ஸஸ் LM MPV-ஐ வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள RTA அலுவலகத்தில் தனது வாகனத்தைப் பதிவு செய்ய அவர் வந்தபோது தான் இந்த தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
45
Naga chaitanya and Sobhita
இந்த கார் அதன் ஹைப்ரிட்-எலக்ட்ரிக் வடிவமைப்பிற்கு பெயர் பெற்றது, கார்பன்-நியூட்ரல் தாக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆடம்பரமான உட்புறத்தை கொண்டது. 2.1 முதல் 2.5 கோடி வரை இதன் விலை இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய நேர்காணல்களில், நாகார்ஜுனா வரவிருக்கும் திருமணங்கள் குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அகிலின் வருங்கால மனைவி ஜைனப் ரவ்தீஜியை தன்னுடைய குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.