நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் குறித்த சுவாரஸ்யங்கள்

Kanmani P   | Asianet News
Published : Jun 08, 2022, 06:00 PM ISTUpdated : Jun 08, 2022, 06:02 PM IST

நயன்தாராவின் வருங்கால கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.

PREV
18
நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் குறித்த சுவாரஸ்யங்கள்
nayanthara - vignesh shivan wedding

விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகில் மிகக்குறைந்த அளவில் படங்களை இயக்கிய போதிலும் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார்..2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் அந்த படத்தின் கதாநாயகியான நயன்தாராவுக்கும் இடையே நடித்த நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் காதல் மலர்ந்தது. 7 ஆண்டு காதல் உறவில் உள்ள இந்த ஜோடி ஜூன் 9 ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளது. 

28
nayanthara - vignesh shivan wedding

விக்னேஷ் சிவனின் தாய் , தந்தை இருவருமே  போலீஸ் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். அவரது தந்தை ஒரு போலீஸ் கண்காணிப்பாளராகவும், அவரது தாயார் மீனா குமாரி வடபழனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். 

38
nayanthara - vignesh shivan wedding

விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்ஆர் செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான  போடா போடியையும் உருவாக்க உதவியது.

48
nayanthara - vignesh shivan wedding

இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டவர்.. ஆம், அவரது வாழ்க்கையில் போராடிய நாட்களில், அவர் சிவி மற்றும் போடா போடி போன்ற படங்களில் கேமியோ வேடங்களில் நடித்தார். போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஒரு பாடலாசிரியராக, அவர் தங்கமே, நாங்க வேற மாறி, டிப்பம் டப்பம், பே, க்விட் பண்ணுடா போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.

58
nayanthara - vignesh shivan wedding

நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்தனர் என்பது  அறிந்ததே, உண்மையில் அது திட்டமிட்ட செயல் இல்லையாம். நாயகி தேர்விற்காக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் இறுதியாகத்தான் நாயகியாகி நாளை விக்கியின் மனைவியாகவுள்ளார். இதை விதி என்று தான் சொல்ல வேண்டும்.

68
nayanthara - vignesh shivan wedding

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் விக்னேஷ் சிவனின் மிகப்பெரிய உத்வேகம்  தற்போது, ​​இயக்குனர் கௌதம் மேனன் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தை ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் படமாக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.. 

78
nayanthara - vignesh shivan wedding

மற்றொரு சுவாரசியமான உண்மை, கௌதம் வாசுதேவ் மேனன் நாளைய தம்பதிகளில்ன்  முதல் படமான நானும் ரவுடி தான் படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை., இப்போது அவர் தம்பதியினரின் திருமணத்திற்கு ஒத்துழைக்கிறார்.

88
nayanthara - vignesh shivan wedding

விக்னேஷ் சிவன் தயாரிப்பாளரும் கூட. அவர் நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதன் மூலம் கூழாங்கல், ராக்கி, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories