அந்த படத்துல நடிச்சது மிகப்பெரிய தவறு - சூர்யா படத்துக்கு எதிராக சீறிய நயன்தாரா..!

Published : Mar 31, 2026, 12:44 PM IST

நடிகை நயன்தாரா தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படமொன்றில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறி இருக்கிறார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

PREV
15
Nayanthara career mistake

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் வந்து போனாலும், காலத்தை வென்று நிற்கும் சிலரில் நயன்தாரா முக்கியமானவர். ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த அவர், ஆரம்பகாலத்தில் சந்திரமுகி போன்ற பெரிய படங்களில் நடித்தாலும், முன்னணி கதாநாயகியாக மிளிர அவருக்கு சில ஆண்டுகள் ஆனது. தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வருகிறார் நயன்தாரா. தனது நீண்டகால பயணத்தில், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தற்போது பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை அதிகமாகத் தேர்வு செய்து வருகிறார்.

25
நயன்தாரா செய்த தவறு

நடிகை நயன்தாராவின் திரைப் பயணத்தில் கஜினி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நல்ல விதத்தில் அல்ல, வேறு விதத்தில். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா - அசின் ஜோடியாக நடித்த அந்தப் படம் வெற்றிப்படமாக மாறியது உண்மைதான். ஆனால் நயன்தாராவை ஏண்டா அந்த படத்துல நடிச்சோம் என ஃபீல் பண்ண வைத்த படமும் கஜினி தான். இதுகுறித்து வானொலி ஒன்றிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியில் நயன்தாரா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

35
கஜினியால் அதிருப்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’ படத்தில் நடித்தது குறித்து அவர் பேசும்போது, அது தனது கரியரில் ஏற்பட்ட ஒரு தவறான முடிவாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்தப் படத்தில் ‘சித்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, அசின் நடித்த ‘கல்பனா’ கதாபாத்திரத்துக்கு இணையான முக்கியத்துவம் தன்னுடைய பாத்திரத்துக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்ததாக கூறினார். ஆனால் படம் வெளியானபின், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏமாற்றமடைந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த அனுபவமே, பின்னர் தன் கதைத் தேர்வுகளில் மேலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

45
லேடி சூப்பர்ஸ்டார்

அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவரோடும் இணைந்து நடித்தார். இரண்டு காதல் தோல்விகளும், அவரின் கெரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தன. ஒரு கட்டத்தில் பிரபுதேவாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்த நயன்தாரா, அவருக்காக சினிமாவை விட்டே விலகவும் முடிவு செய்திருந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் நயன்தாராவின் சினிமா கெரியரும் அவ்வளவு தான் என அனைவரும் வசை பாடினர்.

55
பிசியான ஹீரோயின்

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்க மீண்டும் நடிக்க வந்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். அதனால் "லேடி சூப்பர்ஸ்டார்" என்ற பட்டத்தை தமிழ் ரசிகர்களே அவருக்கு சூட்டினர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் புதிய அத்தியாயம் தொடங்கினார். நானும் ரௌடிதான் படப் பணியின்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் உருவான காதல், திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நயன். இன்றளவும் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி, யாஷ் நடிக்கும் டாக்ஸிக் மற்றும் ஒரு மலையாளப் படம் என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories