லீடர் முதல் வடம் வரை... ஏப்ரல் 3ந் தேதி தியேட்டர் & OTTயில் ரிலீஸ் ஆகும் ஒரு டஜன் படங்கள் என்னென்ன?

Published : Mar 31, 2026, 11:34 AM IST

மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
16
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

லீடர்

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படம் லீடர். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், இயல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 3-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

26
காளிதாஸ் 2

பரத் நடிப்பில் ஹிட்டான படம் காளிதாஸ், அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. அப்படத்தில் பரத் உடன் அபர்ணதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். அப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கி உள்ளார். அப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள அப்படத்தின் எடிட்டிங் பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் மேற்கொண்டுள்ளார். பைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளார். இப்படமும் ஏப்ரல் 3ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

36
கார்மேனி செல்வம்

சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் கார்மேனி செல்வம். நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கனவுகளையும், பணத் தேவையைச் சுற்றியுள்ள போராட்டங்களையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்துள்ள படம் இது. சொந்த வீடும், சிறந்த வாழ்க்கை என போராடும் ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான கதையாக படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராம் சக்ரி இயக்கி உள்ளார். இப்படமும் ஏப்ரல் 3ந் தேதி திரைக்கு வருகிறது.

46
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை ஓடிடி தளங்களில் பலவிதமான படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. ஹாலிவுட் ஹாரர் த்ரில்லர்கள், இந்தி காமெடி டிராமாக்கள், கொரியன் சீரிஸ்கள், தெலுங்குப் படங்கள் என பல ஜானர்களில் இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

வடம்

ஒரு தமிழ் ஆக்‌ஷன் காமெடி குடும்பத் திரைப்படம். திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெறாத இந்தப் படம், இப்போது ஓடிடி-யில் ஒரு புதிய வாய்ப்பை எதிர்நோக்குகிறது. ஏப்ரல் 3 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

Sitaare Zameen Par

2025-ல் வெளியான இந்தப் படம், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு ஓடிடி-க்கு வருகிறது. முன்னதாக யூடியூபில் பே-பர்-வியூ முறையில் கிடைத்த நிலையில், இப்போது சந்தாதாரர்களுக்கு சோனி லிவ்-ல் வெளியாகிறது. சோனி லிவ் ஓடிடியில் ஏப்ரல் 3 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Five Nights At Freddys 2

பிரபலமான வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்ட ஹாலிவுட் ஹாரர் திரைப்படம் இது. 2023-ல் ஹிட்டான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்போது ஓடிடி-யில் வெளியாகிறது. ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 5 முதல் பார்க்கலாம்.

56
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

Happy Patel Khatarnak Jasoos

வீர் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் காமெடி டிராமா, ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. இம்ரான் கான் மற்றும் ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர். இது ஒரு முழு நீள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

Bloodhounds

2023-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற கொரியன் பாக்ஸிங் ரிவென்ஜ் சீரிஸின் இரண்டாவது சீசன் இது. வூ டோ-ஹ்வான் மற்றும் லீ சாங்-யி மீண்டும் கன்-வூ மற்றும் வூ-ஜின் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஏப்ரல் 3 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

High Tides Knokke Off

பெல்ஜியன் டிராமா சீரிஸின் மூன்றாவது மற்றும் கடைசி சீசன் ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது. நோக்கே (Knokke) பகுதியில் வசிக்கும் பணக்காரர்களின் வாழ்க்கையை இந்த சீரிஸ் காட்டுகிறது. இதனை ஏப்ரல் 3ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

66
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

Vadh 2

சஞ்சய் மிஸ்ரா மற்றும் நீனா குப்தா முக்கிய வேடங்களில் நடித்துள்ள க்ரைம் டிராமா இது. தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகிறது.

Mrithyunjay

ஸ்ரீ விஷ்ணு, ரேபா மோனிகா ஜான் நடித்துள்ள இந்த த்ரில்லர் படத்தில், ஒரு கொலையாளிக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே முக்கிய கதை. இந்தப் படம் ஏப்ரல் 4 முதல் பல மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories