ஒரே பாடலில் 17 மொழிகள்... விஜய்-க்காக மதன் கார்க்கி எழுதிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?

Published : Mar 31, 2026, 12:04 PM IST

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பாடல் எழுதுவதில் கில்லாடி என அனைவருக்கும் தெரியும், அவர் விஜய் படத்துக்காக எழுதிய ஒரு வித்தியாசமான பாடல் பற்றி இங்கே பார்க்கலாம்.

PREV
15
Madhan Karky Used 17 languages in one song

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கிய முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து. அவரின் வழியில், அவரது மகன்களான மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோரும் தங்களுக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். இதில், குறிப்பாக மதன் கார்க்கி, புதுமையான ஆய்வுகளையும், மொழி கலவைகளையும் தனது பாடல்களில் இணைப்பதில் சிறந்து விளங்குகிறார். பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் ஜாம்பவானாக அறியப்படும் ஷங்கர், தனது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பவர்.

25
அஸ்கு லஸ்கா பாடல் உருவான விதம்

அந்த வகையில், நண்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற “அஸ்கு லஸ்கா” பாடல் ஒரு தனிச்சிறப்பான முயற்சியாகும். விஜய் நடித்த இந்த படத்தில், வழக்கமாக தனித்தனியாக வரும் பல வகை பாடல் ஸ்டைல்களை ஒரே பாடலுக்குள் இணைத்துப் பரிசோதித்தார் ஷங்கர். இந்த பாடல் காட்சியமைப்பில் மட்டுமல்ல, வரிகளிலும் புதுமை தேவை என்று நினைத்த ஷங்கர், அதற்கான பொறுப்பை மதன் கார்க்கியிடம் ஒப்படைத்தார். அதன்படி, சாதாரண காதல் பாடலாக இல்லாமல், உலகம் முழுவதும் காதலை வெளிப்படுத்தும் பல மொழிகளை ஒரே பாடலில் இணைக்கும் விதமாக வரிகளை அமைத்தார் கார்க்கி.

35
17 மொழிகள் என்னென்ன?

“அஸ்கு லஸ்கா” பாடலின் முதல் வரியிலேயே சுமார் 17 மொழிகளில் “காதல்” என்பதற்கான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டர்கிஷ், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், ஹீப்ரூ, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் காதலை குறிக்கும் சொற்களை ஒருங்கிணைத்து, ஒரு உலகளாவிய லவ் ஃபீலை உருவாக்கியுள்ளார். இதனால், “அஸ்கு லஸ்கா” பாடல் வெறும் இசை அனுபவமாக இல்லாமல், மொழி மற்றும் கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு புதுமையான கலை முயற்சியாகவும் திகழ்கிறது.

45
காதலை வர்ணித்த மதன் கார்க்கி

டர்கிஷ் மொழியில் Asku என்றால் காதல் என்று பொருள், அதேபோல் ஸ்லொவேகியா மொழியில் laska, பிரெஞ்சில் Lamour, ஸ்பேனிஷில் amour, சீன மொழியில் Aii, ஐஸ்லேண்டிக் மொழியில் asth, ஜெர்மன் மொழியில் leibe, ஹெப்ரூ மொழியில் Ahaava, லிங்காலா மொழியில் bolingo, இந்தோனேசிய மொழியில் cintha, அரபிக் மொழியில் Ishq, லித்துவேனியன் மொழியில் meile, ஆங்கிலத்தில் Love, தெலுங்கில் ishtam, மலையாளத்தில் premam, இந்தி மொழியில் Pyar, தமிழில் kaadhal என அவர் இந்த 17 மொழி வார்த்தைகளையும் அழகாக கோர்த்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

55
ஷங்கரின் மாயாஜாலம்

மதன் கார்க்கி தன் பங்கிற்கு லிரிக்ஸில் பிரம்மாண்டத்தை காட்டியதால், ஷங்கரும் அவருக்கு போட்டியாக காட்சியமைப்பில் பிரம்மாண்டத்தை கூட்டி இருந்தார். வழக்கமாக ஷங்கர் படங்களை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு காதல் பாட்டு, ஒரு குத்துப் பாட்டு, ஒரு கிராமத்துப் பாட்டு, ஒரு ராஜா பாட்டு, ஒரு டிரெண்டிங் பாட்டு இடம்பெற்று இருக்கும். இதே டெம்பிளேட்டை தான் ஷங்கர் தன்னுடைய அனைத்து படங்களிலும் பயன்படுத்தி இருப்பார். நண்பன் படத்தில் ஒருபடி மேலே போய், அந்த அனைத்தையும் அஸ்கு லஸ்கா பாடலில் வைத்திருப்பார். அதைக் குறிக்கும் விதமாக கிளாப் போர்டிலேயே அனைத்தையும் சுட்டிக்காட்டி இருப்பார் ஷங்கர். அதனால் தான் அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories