அந்த வகையில் அங்கிருந்து கிளம்பும் போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அவர் எடுத்துள்ள அந்த கேண்டிட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அவர் 4 போட்டோக்களை பதிவிட்டிருந்தாலும், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.